மகாராசன்
எழுத்தில் நகரும் முன்னத்தி ஏர்
புதன், 29 மார்ச், 2017
கூட்டிசைப் பூக்கள்.
காற்றசைப்புகளில்
உதிர்ந்து விழுகிற
பன்னீர்ப் பூக்கள்
முகம் சிரித்துச்
செந்தரையில்
கிடப்பதைப் போல,
கூட்டமாய்ச் சலசலத்து
குரல் சிந்திய கூட்டிசை
காற்றில் கரைந்து
செவியில் நுழைந்து
செல்லத் துள்ளலாய்க்
கண்ணில் மணக்கின்றன
பூனைக் குருவிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக