வெள்ளி, 27 மார்ச், 2020

வேம்பு மரத்தாய்ச்சி: மகாராசன்.

வேனில் காலத்து வெயில் சுட்டெரித்த பொழுதுகளில்
தகித்துக் கொதிக்கிறது பொட்டல்காடு.

காற்றின் வற்றிய மார்புகளில் முட்டிமோதி ஏமாந்தலைந்து
பசியில் நா வறண்டு கிடக்கிறது ஒற்றையடிப் பாதை.

அரவமற்று வெறிச்சோடும்
மறுகால் தலவில்
நிறை சூலியாய் மாண்டுபோன மறத்தியாளின் புதைமேட்டில்
நிழல்பால் கசிந்தபடி
பசுந்தளிர் வெம்பூக்களாய்
மடி விரித்து,
பிள்ளைத் தாய்ச்சித் தவிப்போடு ஒண்டியாய் நின்றசைந்து
உயிர்ப் பாதங்கள் நீவிட
ஈரத் தாலாட்டை இசைக்கிறது
வேம்பு மரத்தாய்ச்சி.

வெம்மையென உயிர் நோகும் கொப்புள வலிகளை
அம்மையாய் வந்திறங்கி மஞ்சளோடு முந்நாள் நீராடி
கூடவே அழைத்துப் போகும் மருத்துவத் தாய்ச்சி.

இப்போதெல்லாம்,
தீண்டுவதற்கும் தொடுவதற்கும் பயந்து நெளிந்து
அடைபட்டு முடங்கி
முக்கி முனங்கி
கண்ணீரும் இன்றி அழுது கிடக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது தாய்ச்சிகளை மறந்துபோன
மனிதப் பேரினம்.

ஏர் மகாராசன்
27.03.2020

5 கருத்துகள்:

  1. வேப்பிலை, மஞ்சளின்
    மகத்துவத்தை மறந்த
    வறட்சியில் மனிதர்கள்.

    பற்றிக் கொள்கின்றன
    நுண்ணுயிர்க்
    கொல்லிகள்.
    பாசமழையில் நனைத்தே.

    அன்றைய இயற்கையின்,
    இன்றையத் தேடல்.

    மிகச்சிறப்பான வரிகளில்.

    அருமை.

    பதிலளிநீக்கு
  2. வேப்பிலை, மஞ்சளின்
    மகத்துவத்தை மறந்த
    வறட்சியில் மனிதர்கள்.

    பற்றிக் கொள்கின்றன
    நுண்ணுயிர்க்
    கொல்லிகள்.
    பாசமழையில் நனைத்தே.

    அன்றைய இயற்கையின்,
    இன்றையத் தேடல்.

    மிகச்சிறப்பான வரிகளில்.

    அருமை.

    பதிலளிநீக்கு
  3. அருமையான கவிதை தோழர். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு