செவ்வாய், 20 டிசம்பர், 2016

கூதிர் காலம் - கவிதை

பனி கவ்விய இரவுகளில்
வெண்நுரை பூக்கும் புல்வெளிகளில்
ஒழுகும் நீர்த்துளிகளாய்
வடிகிறது மனம்.

கூதலில் நடுங்கி
கூதற்காயத் தவிக்கிறது
மேனி.

பச்சை உடுத்தி
பனி போர்த்தி
பஞ்சு நிறம் காட்டுகின்றன
அருகும் கோரையும் நெத்தையும் .

வயல் நீர் பாய்ச்சும்
பின்னிரவுப் பொழுதில்
வரப்பில் நடக்கையில்
சில்லிடுகின்றன கால்கள்.

இப்படியான
பொழுதும் வாழ்வும்
நினைவுகளில் மட்டுமே
வாழ்கின்றன.

நனவிலும் கனவிலும்
பாடாய்ப் படுத்தும்
நினைவுகள்,
இப்படியான
கவிதைகளில் தானே
செழித்து நிற்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக