தமிழகத்தில் துள்ளிதமாக 306 ஆண்டுகள் ஆண்ட விஜயநகர நாயகர் ஆட்சியில் இசுலாமிய, கிறித்தவ தெலுங்கு, சமற்கிருத இலக்கியம் வளர்ந்தது. ஆனால் தமிழ் இலக்கியம் சுத்தமாக 'இல்லை' என்ற சொல்லை நீக்கியதே பள்ளு இலக்கியம். இந்த இலக்கியம் மன்னனை பாடவில்லை. மக்களுக்கு உணவு கொடுத்த உழுகுடி வேளாண் பெருமக்களை கதை மாந்தர்களாக்கி பாடியுள்ளது.
பள்ளு இலக்கியத்தை ஆய்வு செய்து பேரா.கேசவன் உள்பட பலரும் எழுதியுள்ளார்கள். ஆனால் பேராசிரியர் அல்லாத சமூக ஆசிரியரான பொதுவுடமை சித்தாந்ததை தமிழ் மண்ணில் இலக்கிய வடிவமாக கொடுத்த வானமாமலை அவர்கள் ''சரஸ்வதி'' என்ற சிற்றிதழில் பள்ளுப்பாடலை பத்துக்கும் மேல் பட்ட தலைப்புகளில் நுண்மான் நுலைபுலமாக ஆய்வு செய்து வடித்துள்ளார். இந்த கட்டுரைகள் இதழிலே முடங்கிக் கிடந்ததை நூல் வடிவமாக்கி வானமாமலைக்கு புகழாரம் சூட்டியுள்ளார் என்பதை விட தமிழுக்கும் அதன் நிலத்தையும் பெருமைப்படுத்தி இருக்கிறார் தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு பள்ளிப் பள்ளி ஆசிரியர் முனைவர் ஏர். மகாராசன். இவர் பள்ளியில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் பங்குடன், பத்துக்கு மேல்பட்ட நூல்களை எழுதி நம் போன்ற 'சமூக' மாணவர்களை உருவாக்கி வலம் வருகிறார்.
''சங்க இலக்கியமான புறாநானூறு, சிலப்பதிகாரம், சமற்கிருத தழுவல் இலக்கியமான அறியப்படும் கம்பன் எழுதிய ராமாயாணம் தவிரத்து உழவனை பாடிய தமிழ் இலக்கியம் முக்கூடல் பள்ளு மட்டுமே. பள்ளுப் பாடல் முழுக்க முழுக்க உழு குடிகளான வேளாண்மை சமூகத்தை மையமாக வைத்து பாடப்பட்ட இலக்கியம். பாண்டிய மண்டலமாக அறியப்படும் மதுரை நாயக்கர் எல்லையில் உள்ள திருநெல்வேலி சீமையே இதன் களம். வேளாண்குடிகளான உழைக்கும் குலமாக இன்றுவரை அறியப்படும் பள்ளர் குலத்தினரே இந்த பள்ளு இலக்கியத்தின் கதாநாயகர்கள்.'' 'பள்ளு இலக்கியம் உருவாக காரணம், 'நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சத்தாலும் ஆட்சியில் பார்ப்பன ஆதிகம் அதிகமானதாலும் மன்னனை பாடிய புலவர்கள் மக்களை தேடிப் பாடினார்கள். அதிலும் பண்ணை முதலாளியை பாடவில்லை பண்ணையில் வேலை பார்த்த பள்ளனையும், பள்ளியும் பெருமையாக பாடியுள்ளது இலக்கியம். இந்த இலக்கியம் கூத்து வடிவமாக மக்களிடம் செல்வாக்கு அடைந்தது. அதனை எதிர்த்துள்ளது நாயக்கர் அரசு. ஆனாலும் மக்களிடம் இந்த கூத்து வடித்தின் செல்வக்கை குறைக்க முடியாமல் போனதால் இதை வைணவ தளங்களான சீரங்கம், திருகோட்டியூர், சீவிலிபுத்தூரில் பாடி ஆடிட ஆட்சியாளர் மனம் போன போக்கில் கம்பன் எழுதிய ராமாயாணம் போல் பள்ளுப் பாடலை தழுவி குருகூர் பள்ளு கோயில் ஒழுகு என மாற்றி எழுதியுள்ளனர்' என வானமாமலை குறிப்பிடுவத அச்சுப் பிசுகாமல் தந்துள்ளார் ஏர். மகாராசான்.
'பள்ளுப்பாட்டின் வளர்ச்சி என்ற கட்டுரையில் பட்டியல் குலத்தினர் கோயில் நுழைவுக்கான கருவே இந்த பள்ளுப்பாடல் தான். சீரங்கத்தில் பள்ளுப்பாடலுக்கு எதிர்பு கிளம்ப சீரங்க பெருமானே அரயர் (நடன மாதர்) என்பவதை பள்ளனிடமும் பள்ளியிடமும் பாடல் கற்றுவரச் சொன்னதாகவும் அதை கற்று வந்த அரயர் சீரங்க பெருமாள் முன் ஆடியதாகவும் கோயில் ஒழுகு சொல்லுகிறது. இதை தனது ஆய்வில் கோயில் நுழைவு போராட்டம் என்பது பிரிட்டீஷ் இந்தியாவுக்கு முன்பே நடந்திருக்கிறது அது தான் பள்ளுப்பாடல்' என விவரிக்கிறார்.
சோழர் ஆட்சி திராவிட நாடுகள் தாண்டி வளர்ந்த போது இடங்கலை வலங்கலை பிரச்சனை நீடித்தது. இதன் நீட்சியாக விஜயநகர ஆட்சியில் தொடர்ந்தது. இது இருக்க வைணவ சைவ மார்க்க சண்டையும் சோழர் கால ஆட்சியில் போல் நடந்தது. வைணவ சைவ சண்டைகளில் உழு குடிகள் எப்படியெல்லாம் சீப்பாட்டார்கள் என்பதை நூல் விவரிக்கிறது.
'பள்ளு இலக்கியத்தில் அரசின் பண்ணையாள் (முதலாளி) ஏச்சு பேச்சாக ஏளமாக உள்ளதை அருமையாக சுட்டிக்காட்டி படிப்பவர்களை பொதுவுடமை சித்தாந்த சிந்தனையை நம் மூளைக்குள் முனைப்பு காட்டுக்கிறார் ஆசிரியர் . முதலாளிகளை நகையாடுவதை கிராமங்களில் இன்றும் கோயில் விழாக்களில் போடப்படும் ராசா ராணி ஆட்டத்தில் 'ராசா வேடமிட்டவர் தோட்ட முதலாளியாகவும், உழவனாக கோமாளி வேசமிட்டவரும் சிறுகதையாடல் வைத்து பாடலோடு வசனம் இருக்கும் அதில் முதலாளியைப்பார்த்து ''ஏ மாப்பிள்ளை, ஏலே தோட்டகார வெண்ணை உனக்கென்ன பிறங்கையை கட்டிக்கிட்டு வரப்பில போவ ... குனிஞ்சு வேலை செய்தாத்தாண்டா விளையும்' என்றும் நாட்டாமையை 'ஏ மாப்பிள நாட்டாமை லூசு நாட்டாமை செவுட்டு பயலே' இப்படியான வசனங்களை கோமாளி பேசுவார். இந்த வசனங்கள் பள்ளுப்பாட்டின் நீட்சியாகவே கிராமிய கலைகளை ஆய்வு செய்த மறைந்த நாட்டுப்புறவியல் பாடகர் பேரா.குணசேகரன் குறிப்பிடுவார்.
அறுபத்தி ஐந்து பக்கத்தில் சமூகத்தின் தேவையை அறிந்து பள்ளுப் பாடலின் ஆழத்தை வழங்கி தமிழை தமிழ் சமூகத்தை செழுமைப் படுத்தியுள்ளது இந்த நூல். நல் பணியை செய்த திரு. ஏர். மகாராசனை எனது ஆசான் தமிழ்குடிமகன் சொல்லில் வாழ்த்துவதென்றால் பெரும்பேராசியர் வாழ்க எம்மான் வையகத்தே என வாழ்த்துவோம்.
பதிப்பகம் ; ஆதி , 9994880005, விலை உரூபா - 60
அருமை.
பதிலளிநீக்குத.அழகேசன்.
நல்லதொரு விமர்சனம்.
பதிலளிநீக்கு