கீழடியில் நடைபெற்ற முதல்கட்ட அகழாய்வின்போது அங்கு போய் வந்திருந்தேன். அங்கு கிடைத்திருந்த பல்வேறு தொல்லியல் பொருட்கள் எம்மை வியப்பில் ஆழ்த்தியிருந்தன. அங்கு கிடைத்த பானையோடுகளில் பல்வேறு பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவற்றுள் மிக முக்கியமானது 'மடைச்சி' எனும் பெயர் பொறிக்கப்பட்ட பானையோடுதான்.
இந்த மடைச்சி எனும் பெயர் குறித்து அப்போது நான் எழுதிய கட்டுரைதான் 'ஆற்றங்கரை நாகரிகமும் மடைச்சி வாழ்ந்த கீழடி நிலமும்' எனும் கட்டுரை.
மடைச்சி குறித்தும் நீர் மேலாண்மை குறித்தும் வெளிவந்த முதல் கட்டுரை அது.
https://maharasan.blogspot.com/2017/12/blog-post_23.html
அதே அகழாய்வில் கிடைத்த பானையோட்டில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டதும் கிடைத்திருந்தது. மீன் சின்னம் பொறித்த அந்தப் பானையோட்டின் முகப்பைத்தான் நான் எழுதிய 'தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு' எனும் நூலின் அட்டைப் படமாகவும் வந்தது.
கீழடி அருங்காட்சியகத்தில் நேற்று குடும்பத்தாருடனும் நண்பர் அய்யனாருடனும் திரும்பவும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமகிழ்ச்சி.
👍
பதிலளிநீக்குஅருமையான கருத்துக்களை
பதிலளிநீக்குஉழவர் குடிகளும் உழவர்குடிகளை நேசிப்பபவர்களும் வாசிக்கவும் நேசிக்கவும் ஆவணம் செய்யவேண்டும்
கா பெரியசாமி காரைக்குடி
பதிலளிநீக்குமகாராசன் ஐயாவுக்கு வாழ்த்துகள் தமிழனும் தமிழும் தந்த வாழ்வியல் வரலாறுகளைக் கட்டிக் காக்கவேண்டும் உணர்ச்சியற்ற தேவேந்திரர்களுக்கு உணர்வுட்டிய. தென்மாவட்டப் பேரிடர்
வஞ்சிக்கும் ஆளும் அதிகாரம் ஒருபக்கமென்றால் இயற்கையும் நமக்கு ஏதோ சொல்ல வறுகிறது பாண்டியர்களென பகட்டாக
பெருமை பேசும் நாம்
படைப்பாளர்களையும் எழுத்தாளர் களையும் ஏன் போற்ற மறந்தோம்
எத்தனையோ ஆய்வு எத்தனையோ ஆதாரம் அத்தனையிருந்தும்
நம்மை பாண்டிய வம்சமென அதிகாரம் காட்டாத அடக்கமும்
சகிப்புத் தன்மையும் இன்னும் ஏன் நம் குலசாமியைத் தாழ்த்தினான் மாற்றுத் தெய்வத்திற்கு மாறிநோம் நம் குலத்தொழிலைத் தாழ்த்தினான் மாற்றுத் தொழிலுக்கு மாறிநோம்
உழவு செய்த நம்குடி களவாட வந்தவனின் கைப்பாவையாகிப் போச்சு
ஏர் மகாராசன் ஐயாவுக்கு என் வாழ்த்துகள் 8489926502
பதிலளிநீக்கு