வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

ஏறு தழுவுதல்: உணர்ச்சிப் பொங்கிப் பெருகும் நூல் - அய்யனார் ஈடாடி.


எழுத்தாளர் ஏர் மகாராசன் எழுதிய நூலான 'ஏறுதழுவுதல் : வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும்' என்ற‌ நூலைப் படித்தேன். சரியாக அறுபத்து நான்கு பக்கங்கள் கொண்ட இந்நூல் அய்வகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை பற்றியும், இந்நிலத்தில் வாழ்ந்த மக்களின் தொழிலைப் பற்றியும் பேசுகின்றன.

விலங்குகளோ பறவைகளோ உணவுக்கு மற்றவர்களைச் சார்ந்தே வாழ்கின்றன. ஆனால், மனிதர்கள் மட்டுமே தனக்குத் தேவையான உணவுப் பொருட்களைத் தானே உற்பத்தி செய்து கொண்டு, இந்தப் பிரபஞ்சத்தில் வாழ்தலைப் பற்றியும் எடுத்துரைக்கிறார்.

அதிலும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், மருதநில மக்களின் வேளாண் தொழிலைப் பற்றியும், அவர்கள் உழவுக்குப் பயன்படுத்திய ஏர் மாடுகளைப் பற்றியும், மாடுகளின் வகைகளைப் பற்றியும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

தைத்திருநாள், தமிழர் திருநாளான பொங்கலைப்பற்றியும், மாட்டுப் பொங்கலைப் பற்றியும் கிராமத்திய ஏறு தழுவல் பற்றியும் எடுத்துரைக்கிறார்.

மாடுகளும் மனிதர்களும் ஒன்றே; குடும்பத்தில் ஒருவர் என்றும் சொல்கிறார். அப்படித்தானே இன்றளவும் தமிழ்ச் சமூகம் பார்த்து வருகிறார்கள்.

முக்கூடற்பள்ளுப் பாட்டுக்களை மேற்கோள் காட்டியும், ஆதிக்கச் சமூகத்தின் நிலம் மற்றும் உரிமைகளைப் பற்றி ஆங்காங்கே பேசுகின்றன இந்நூல்...

ஏறு தழுவுதல் எனும் மாடு தழுவல் தமிழர் பண்பாடு சார்ந்தது; நிலம் சார்ந்ததது; பண்பாடு சார்ந்தது; உரிமை சார்ந்தது; தமிழர் சார்ந்தது என்று உணர்ச்சி பொங்கிப் பெருக நூலை முடித்திருக்கிறார்.

மேன் மேலும் பற்பல படைப்புகளைப் படைக்க வாழ்த்துக்கள் எழுத்தாளருக்கு...

மகிழ்வுடன்,
அய்யனார் ஈடாடி.
*
ஏறு தழுவுதல்:
வேளாண் உற்பத்தியின்
நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும்,
மகாராசன்,
அடவி வெளியீடு, திருவண்ணாமலை.
தொடர்புக்கு:
தில்லை முரளி:
+91 99948 80005.

அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக