சனி, 4 டிசம்பர், 2021

வேளாண் மரபின் தமிழ் அடையாளம் : சாதிய நூல் அல்ல; தமிழர்களின் சரித்திர நூல் - இரா.அ.கரிகால மல்லன்


சங்க இலக்கியச் சான்றுகளும், அறிஞர்களுடைய கூற்றுகளும்,  மறுக்க முடியாத தரவுகளும், தமிழர் வாழ்வியலும் பின்னிப்பிணைந்த வரலாற்று நூலாகவும் சிறந்த படைப்பாகவும் திகழ்கிறது பெருமதிப்பிற்குரிய அண்ணன்  ஏர் மகாராசன் அவர்கள் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூல். 

வேட்டைச் சமூகத்தில் தொடங்கி, குறிஞ்சி வாழ்வையும் மருதநில வரலாறும் விரிவாக எழுதப்பட்ட வரலாற்று நூல் இது.

உழவனே கிழவன்; கிழவனே அரசத் தொடக்கம்.. அவனே வேந்தன். 

தமிழுக்கே இலக்கணம் படைத்த தொல்காப்பியனைத் தொடர்ந்து, தமிழ் இலக்கிய இலக்கணங்களைச் சான்றுகளாக எடுத்துரைத்து, அறிஞர் பெருமக்களைச் சாட்சிகளாகப் பதிவுசெய்து,  கும்மிப் பாடல்கள் உட்பட பல தரவுகள் இந்நூலுக்கு மெருகூட்டுகின்றன. 

நீருக்கும் நிலத்திற்குமான தொடர்பும், பொன்னேர் பூட்டும் வாழ்வியலும், நாற்று நடவும், விழாக்களும், அறுவடைப் பெரு விழாக்களிலும் இறைவனான சிவனும் பார்வதியும் முருகனும் நெல்லின் மக்களான பள்ளர்களாக எடுத்துரைத்தது, உழவுக்கு மறுக்க முடியாத அசைக்க முடியாத சான்றுகளாகும். 

நீர் மேலாண்மையைக் கட்டியெழுப்பிய குளத்துப்பள்ளனும் குமிழிப்பள்ளனும் மடைக்குடும்பனும் மறுக்க முடியாத சான்றுகளாக உள்ளனர். இந்நூலை, சாதிய நூலாகப் பார்க்க முடியாது. தமிழர்களின் சரித்திர நூல் என்பதே உண்மை. வேளாண் மரபின் தமிழ் அடையாளம்  வெற்று நூல் அல்ல; வெற்றி நூல். 

*

கட்டுரையாளர்:
இரா.அ.கரிகாலமல்லன்
தமிழர் மீட்புக்களம்,
தமிழர் நாடு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக