புதன், 29 மார்ச், 2017

களவு நிலம்.


உழுது போட்ட தொளியில்
நெளிந்து திரிந்த
மண் புழுவாட்டம்
நேயம் நெப்பிய
பொழுதுகள் தொடங்கி
தொலைந்திடத் துணிந்தேன்
உன் வயல்மனக் காட்டில்.

பொய்த்துப் போன
மழை நினைத்தே
தவித்துக் கிடக்கும்
நெல்வயல் போல்
அழுகைக்காக
உன் மடியும்
உன் மடிக்காக
மற்றுமோர் அழுகையும்
சாவிப் பயிராகவே போனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக